தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை – ரமேஷ் பதிரன

இரண்டாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு தடுப்பூசி பற்றாக்குறை காணப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தின் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கான ஆபத்து இருந்தாலும், அதைச் சமாளிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று  (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்நிலைமை தொடர்பாக அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பதிரன குறிப்பிட்டார்.

மேலும் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை சுகாதார அமைச்சு அதே வழியில் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் தற்போதைய நிலைமை தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.


Recommended For You

About the Author: ஈழவன்