அல்வாயில் வாள் வெட்டு – ஒருவர் பலி

வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு. கௌசிகன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அல்வாய் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இன்றைய தினம் மதியம் வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைளையும் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: ஈழவன்