கிளிநொச்சியில் காணி விடுவிப்பு

கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 23 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது.

இதன்போது, காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்களை, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய கையளித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன.

காணி விடுவிப்பு தொடர்பாக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், படையினர் வசமுள்ள ஏனைய காணிகளையும் விடுவிப்பதற்காக  முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

இதேவேளை குறித்த காணி விடுவிப்பு தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பாக மக்கள் தமது ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் குறித்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்