உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 40ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில் 19இலட்சத்து 53ஆயிரத்து 16பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 506பேர் பாதிக்கப்பட்டதோடு 214பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 25ஆயிரத்து 339பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 87ஆயிரத்து 677பேர் பூரண குணமடைந்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்