இலங்கைக்கு நிதி உதவி

இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் 8.5 மில்லியன் யூரோ நிதியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் நிலவும் பிரிவினைவாத தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், சமூக எதிர்வினை செயற்பாடுகளை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் வெளிவிவகார அமைச்சர் திலக்மரபன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவர் பெட்ரிகா மொகெரினி ஆகியோருக்கு இடையில் நடைப்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த உதவித் தொகையை வழங்க தீர்மானிததாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்குவது போன்ற சவால்களை இலங்கை எதிர்கொண்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பிரதான மூன்று முக்கிய நோக்கங்களுக்காக இலங்கைக்கு 8 தசம் 5 மில்லியன் யூரோவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya