தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  வினாத்தாள் திருத்தப் பணிகள்

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  வினாத்தாள் திருத்தப் பணிகள் இன்று (15) ஆரம்பாகியுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதிவரை வினாத்தாள் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

39 பாடசாலைகளில் வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்த பணிகளில் 6976 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya