சத்தியலிங்கத்தை பாராட்டிய பிரதமர்

வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டம் தயாரித்து அதனடிப்படையில் நெதர்லாந்தின் நிதிஉதவி மற்றும் இலகுகடன் அடிப்படையில் பெறப்பட்ட 60 மில்லியன் யூரோ (12,000 மில்லியன் இலங்கை ரூபா) நிதியில் வவுனியா வைத்தியசாலையில் இருதயநோய் சிகிச்சைப்பிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவு என்பனவும், பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் நவீன சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கப் பிரிவும், கிளிநொச்சியில் தாய்சேய் விசேட சிகிச்சை மத்திய நிலையமும், மாங்குளத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்களிற்கான சிகிச்சை பிரிவு மற்றும் உளநலப்பிரிவும் அமைக்க முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிதியை நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கை தொடர்பிலேயே பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Ananya