யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுமந்திரன் , சிறிதரன் விஜயம்

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு வைத்திய சாலையில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
வைத்திய சாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திய சாலை பிரதி பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா உள்ளிட்ட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதுடன் , நிலவும் ஆளணி பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் , வைத்திய சாலை விடுதிகளையும் நேரில் பார்வையிட்டனர்.


Recommended For You

About the Author: ஈழவன்