விபத்தில் இருவர் பலி

தம்புள்ளை – குருணாகலை வீதியின் பொல்கொல்ல விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வேன் ஒன்று வீதியில் பயணித்த இருவரின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

63 மற்றும் 87 வயதுடைய பொல்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya