வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும்

2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியல் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் மாவட்ட செயலாளர் காரியாலயங்களில் இவ்வாறு வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாராவது ஒருவரின் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனின் அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Ananya