91 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தோரின் எண்ணிக்கை !

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 145 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை தொற்று உறுதியான 93 ஆயிரத்து 595 பேரில் 2 ஆயிரத்து 301பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 586 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்