கேடு கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான்

கேடு கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் தொகுதியில் தனது வாக்கினை அளித்த அவர், பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ இயந்திரத்தின் உதவியுடன் வாக்களிக்கும் முறை ஒரு துயரம் தான் எனவும் அவர் குறிப்பட்டார். வாக்கு இயந்திரங்கள் பழுதானால் பெருமளவான மக்கள் காத்திருக்க நேரிடுவதாக தெரிவித்த அவர், இந்த முறை துயரம் தான் எனவும் விமர்சித்துள்ளார்.

வாக்களிப்பு இயந்திரங்களை கண்டுப்பிடித்த, உற்பத்தி செய்கின்ற நாடுகளே அதனை பயன்படுத்தாமல் இருக்கும் நிலையில், இந்தியாவில் அதனை பயன்படுத்துவது கேலி கூத்து எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் நேர வித்தியாசத்திற்கும் மத்தியில் வாக்கு எண்ணும் நடவடிக்கை ஒரேநாளில் நடைபெறுவதாக தெரிவித்த அவர், மே 2 ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியாகுவது சந்தேகத்திற்கு உரியது எனவும்  குறிப்பிட்டார்.

தேர்தல் அமைப்பு முறைகளில் நிறைய மாற்றங்கள் தேவை எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொருவருக்குள்ளும் மாற்றம் தேவை என்பதையும் அவர்  வலியுறுத்தினார்


Recommended For You

About the Author: ஈழவன்