கொரோனா மரணம் 586ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த இருவரும் கொழும்பைச் சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 வயதுடைய பெண்ணொருவரும் 67, 71, 77 ஆகிய வயதுகளையுடைய ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 586ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 595ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 90 ஆயிரத்து 563 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 446 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்