அசாஞ் உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்: ஐ.நா நிபுணர்

விக்கிலீக்ஸ் இணைநிறுவனர் ஜூலியன் அசாஞ் நீண்டகாலமாக உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை நிபுணர் நில்ஸ் மெல்ஸர் தெரிவித்துள்ளார்.

அசாஞ்-இன் மனித உரிமைகள் மீறப்படுமென்பதாலும் விசாரணைக்குத் தகுந்த நிலையில் அசாஞ் இல்லையென்பதாலும் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தவேணடாம் என பிரித்தானியாவை மெல்ஸர் வலியுறுத்தியுள்ளார்.

அசாஞ்-இன் விருப்பத்தை முறியடிப்பதற்காக பல ஜனநாயக நாடுகள் ஒருங்கிணைந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் மெல்ஸர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மெல்ஸரின் அவதானிப்புகள் பலவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நிராகரித்துள்ள பிரித்தானிய அரசாங்கம் பிரித்தானியா எந்தவொரு சித்திரவதைகளிலும் பங்கெடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor