தான்சானியா ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு!

தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த 61 வயதான ஜான் மகுஃபுலி, சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.

இதன்போது, ஜான் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

இதனால் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 45 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்