‘மாநாடு’க்கு பதில் ‘மகா மாநாடு’

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் திட்டமிட்டிருந்த ‘மாநாடு’ திரைப்படத்தில் இருந்து திடீரென சிம்பு நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘மாநாடு’ திரைப்படத்தில் சிம்புவுக்கு பதில் வேறு ஒரு நடிகர் நடிப்பார் என்றும் இந்த படம் குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்தார்

இந்த அறிவிப்பு சிம்புவுக்கும் அவரது ரசிகர்களுக்கு பெரும்  அளித்தது.

‘மாநாடு’ திரைப்படம் சிம்புவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ‘மாநாடு’க்கு பதில் ‘மகா மாநாடு’ என்ற படத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரிக்க உள்ளதாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘மகா மாநாடு’ திரைப்படம் ‘மாநாடு’ படத்திற்கு சவால் விடுக்கும் வகையில் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Recommended For You

About the Author: Editor