குற்றத் தடுப்பு அதிகாரிகளுக்கு கஞ்சிபானவுக்கும் தொடர்பா!!

கஞ்சிபான இம்ரானுடன் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாகல்கந்தே சுனந்த தேரர் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சிலர், தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் என்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்ற சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணுவதாகத் தெரிவித்து மாகல்கந்தே சுனந்த தேரர், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் மேல் மாகாண கண்காணிப்பின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அதிகாரிகள் குறித்த சந்தேகநபருடன் தொடர்புகளைப் பேணியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor