முஸ்லிம் நாடுகள் கூட காஷ்மீர் விவகாரத்தில் உதவ முன்வரவில்லை!!

காஷ்மீர் விவகாரத்தில் தமக்கு முஸ்லிம் நாடுகள் கூட ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷா மக்மூது குரேஷி கவலை வௌியிட்டுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மக்மூது குரேஷி, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் முசாபராபாத் பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது , காஷ்மீர் விவகாரம் பற்றி தனது மனவருத்தத்தை வௌியிட்டார்.

அப்போது அவர் மேலும் கூறுகையில், “பொது மக்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழக்கூடாது. கைகளில் மாலையோடு உங்களுக்காக ஐக்கிய நாடுளின் பாதுகாப்பு ஆணையகத்தில் யாரும் காத்திருக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டார்.

முஸ்லிம் நாடுகள் கூட பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை என்பதை அவர் சூசகமாக சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அந்த நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டார்கள்.

உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அவர்களுக்கென்று பொருளாதார நலன்கள் உள்ளன. இந்தியா 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொண்ட பெரிய சந்தையாக திகழ்கின்றது.

ஏராளமானோர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர். இஸ்லாம் காப்பாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் சொந்த நலன்தான் அவர்களுக்கு முக்கியமாக போய்விட்டது” என்று குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor