அவுஸ்ரேலியாவில் போதைப் பொருள் பறிமுதல்!!

அவுஸ்ரேலியாவிலும், நியூஸிலாந்திலும் நடத்தப்பட்ட போதைப் பொருள் ஒழிப்புச் சோதனைகளின் போது ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பிரித்தானியாவிலிருந்து போதைப் பொருளை விநியோகம் செய்யும் குழுவை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அந்த பகுதியில் இதுவரையில்லாத வகையில், 90 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளைக் கொண்டு 12 மில்லியன் ‘எக்ஸ்டஸி மாத்திரை’களைத் தயாரிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரித்தானியர்கள் நால்வரும் 40 லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

ஓர் அவுஸ்ரேலிய ஆணுக்கு 26 வயது எனவும், மற்றைய அவுஸ்ரேலியப் பெண்ணின் வயது 51 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நியூஸிலாந்தின் ஓக்லாந்தில் நடத்தப்பட்ட சோதனையில் 200 கிலோகிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor