கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு கீரிமலை நகுலேஸ்வரர் சமேத நகுலாம்பிகாதேவி ஆலய தேர்த் திருவிழா இன்று சிறப்புற நடைபெற்றது.

அபிசேக ஆராதனைகளுடன் இன்று (வியாழக்கிழமை) காலை வசந்த மண்டபப் பூசைகள் நடைபெற்று விநாயகர், முருகப்பெருமான் – வள்ளி தெய்வானை சமேதரராக நகுலேஸ்வரப் பெருமான்  உள்வீதியில் வலம்வந்து, தேரில் ஆரோகணித்தார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தில், நேற்றிரவு திருவிழாவாக சப்பைரதத் திருவிழாவும் 14 ஆவது நாளான சிவராத்திரி தினமாகிய இன்று காலை தேர்த் திருவிழாவும் நடைபெற்றது.

இதனை்த தொடர்ந்த, இன்று இரவு சிவராத்திரி விசேட பூசைகள் நடைபெற்று 15ஆம் நாளாகிய நாளைய தினம் கீரிமலை புனித கண்டகி தீர்த்தத்தில் நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவடையவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்