ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரலில் ஆரம்பம்?

2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடா் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடா் மாா்ச் 28ஆம் திகதி முடிவடைகிறது.

அதைத்தொடா்ந்து ஏப்ரல் 9ஆம் திகதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி, மே 30ஆம் திகதி முடிவடையவுள்ளது.

போட்டி நடைபெறும் திகதி மற்றும் மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என பிசிசிஐ நிா்வாகி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

சென்னை, டெல்லி, கொல்கத்தா, அஹமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என தெரிகிறது.

முன்னதாக மும்பையில் மட்டுமே ஐபிஎல் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அங்கு இப்போது  கொரோனா வேகமாக பரவி வருவதால், அங்கு போட்டியை நடத்தும் முடிவில் இருந்து பிசிசிஐ பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்