ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு ?

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் ஈசான் மானி கூறுகையில், ‘ஆசிய கிண்ண தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், இம்முறை ஜூன் மாதம் லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

அதேநேரம் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் ஆசிய கிண்ண தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

இதனால் அட்டவணையில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஆசிய கிண்ணம் நடத்தப்பட மாட்டாது என்றே தெரிகிறது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்