கொடிகாம சந்தைக்கு பூட்டு!

கொடிகாமம் சந்தையில் COVID-19 தொற்றையடுத்து, இன்று கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக சந்தைக்குப் பூட்டு.
நாளை வழமை போல இயங்கும், ஆனாலும் PCR பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும், பரிசோதனைக்குட்படாத வியாபாரிகள் PCR பரிசோதனைகளின் பின்னரே வியாபார நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தையில் மூன்று வாயில்கள் உள்ள போதும், ஒரு வாயிலில் மாத்திரமே கை கழுவிசுத்தம் செய்ய தண்ணீர் மற்றும் சவர்காரத் திரவம் வைக்கப்படுவதாகவும், ஏனைய இரு வாயில்களில் இவ் நடவடிக்கை இல்லை என வியாபாரிகள் சுட்டிக் காட்டினர்.
இதனை சாவகச்சேரி பிரதேச சபையினர் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர், இதனை பொதுச் சுகாதார பரிசோதர் அவதானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: ஈழவன்