தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் தென்னாபிரிக்காவில், தென்னாபிரிக்காவில் 50ஆயிரத்து 77பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் தென்னாபிரிக்காவில், 15இலட்சத்து 13ஆயிரத்து 959பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 566பேர் பாதிக்கப்பட்டதோடு 84பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால், 32ஆயிரத்து 546பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 546பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 31ஆயிரத்து 336பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்