வட்ஸ்அப் செயலியில் அறிமுகமானது கைரேகை ஸ்கானர் வசதி

வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சேர்த்த வண்ணம் உள்ளது. அதன்படி வட்ஸ்அப் (WhatsApp) கைரேகை ஸ்கானர் வசதியை (fingerprint unlocking support) அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த வட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த வசதி அண்ட்ரொய்ட் ஸ்மார்ட் போனில் இருக்கும் கைரேகை சென்சாரை பயன்படுத்துவதன் மூலம் உங்களின் வட்ஸ்அப் செயலி திறக்கும்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், கைரேகை ஸ்கானரை பயன்படுத்தி நீங்கள் உங்களின் அண்ட்ரொய்ட் ஸ்மார்ட்போனை அன்லொக் செய்வது போலவே வட்ஸ்அப் கணக்குக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது வரை அண்ட்ரொய்ட் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி நீங்கள் அண்ட்ரொய்ட் பீட்டா (beta for Android) பதிப்பு 2.19.221-ஐ வைத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை உங்கள் வட்ஸ்அப் செயிலில் பயன்டுத்திய பிறகு, பின்னர் வரும் வட்ஸ்அப் அழைப்புகளை எடுக்க நீங்கள் அன்லொக் (unlock) செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். மேலும் மெசேஜ் ரிப்ளையை பொறுத்தவரை வழக்கம் போல வட்ஸ்அப்பிற்க்குள் நுழையாமலேயே பதில் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று விருப்பங்கள்

குறிப்பாக இந்த கைரேகை ஸ்கானர் வசதி பொறுத்தவரை எப்போதெல்லாம் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மெசேஜ் அனுப்புவதற்கு அன்லொக் செய்ய வேண்டிய நிலை வந்தால், கண்டிப்பாக அது அனைவருக்கும் எரிச்சலூட்டும், எனவே உங்களுக்கு மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால், Immediately, after 1 minute or after 30 minutes போன்ற விருப்பங்கள் ஆகும். இந்த வசதியுடன் வரும் மற்றொரு அம்சம் என்னவென்றால், உங்களுக்கு வரும் வட்ஸ்அப் மெசேஜ்களின் Notification bar ஆனது காட்சிப்படலாமா வேண்டாமா என்பதை நீங்களே தேர்வு செய்யலாம். மேலும் விரைவில் பல்வேறு புதிய வசதிகளை கொண்டுவர வட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya