ஒஸ்கார் பட்டியலில் சூரரைப் போற்று

சூர்யா அபர்ணா முரளி நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஒஸ்கார் விருதுக்கு தகுதியான திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியாகிய இந்த திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் ஒஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களில் ஒன்றாக ‘சூரரைப்போற்று’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்