தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநில அளவிலான குழு ஆய்வு நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைகள் இறந்தது தொடர்பான முழு விவரம் விரைவில் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 27 குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆதாரமின்றி எந்த ஒரு தகவல்களையும் வெளியிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்


Recommended For You

About the Author: ஈழவன்