வழமைக்குத் திரும்புகின்றன ஹொங்கொங் விமான சேவைகள்!

ஹொங்கொங் விமான நிலையத்தை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் போராட்டங்கள் தீவிரமடைந்ததால் விமான நிலையத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் சென்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலையத்தின் கரும பீடங்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைத்து சேவைகளையும் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இன்று அதிகாலை விமானங்கள் திட்டமிட்டபடி இயங்குவதற்கு தொடங்கிய போதும், சில சேவைகள் தாமதமடைந்ததுடன் வேறு சில ரத்து செய்யப்பட்டன

சில நாட்கள் இடையூறுகளுக்குப் பின்னர், விமான நிலைய ஆணையகம் போராட்டக்காரர்களை சில பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து தற்காலிக தடை உத்தரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விமான நிலையத்தால் நியமிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர வேறு பகுதிகளில் பயணிகள் அல்லது தனிப்பட்டவர்கள் செல்வதற்கோ, காத்திருப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Recommended For You

About the Author: Editor