
இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரியெல்ல – தும்பர பகுதியில் நேற்று பிற்பகலே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது
தும்பர பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது வீட்டிலுள்ள இரும்பு கட்டிலுக்கு கீழ் உறங்கி கொண்டிருந்துள்ள போதே இவ்வாறு மின்னலால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது கவலைக்கிடமான நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை நேற்று முன்தினம் இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததுடன் கடும் காற்றும் மற்றும் மின்னல் தாக்கமும் அதிகமாக காணப்பட்டன. இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.