மடுவில் மெழுகுதிரி பவணி.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது. தொடர்ந்து நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை(13) மாலை இடம் பெற்ற நவ நாள் திருப்பலியை தொடர்ந்து நேற்று இரவு மடு திருத்தலத்தில் மெழுகு திரி பவணி இடம் பெற்றது. -குறித்த பவணியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருக்கள், அருட்சகோதரிகள், பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் காணப்படுகின்ற போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பொலிஸ் , இராணுவம், கடற்படை விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்