களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை.

களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், களுகங்கையை அண்டியுள்ள புளத்சிங்கள, பாலிந்தநுவர, கிரியெல்ல, இங்கிரிய, மதுராவல ஆகிய பிரதேச செயலகங்களின் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்களுக்கு நீர்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

களுகங்கையில் இரத்தினபுரி நீர் அளவிடும் இடத்தில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தாலும், எல்ல மற்றும் மில்லகந்தை நீர் அளவிடும் இடங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக திணைக்களம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நேற்று விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி, கிரிஎல்ல போன்ற பிரதேசங்களில் 110 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்