அனலைதீவு ஐயனார் கோவில் தேர்.

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்.அனலைதீவு ஐயனார் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் கடந்த 09 நாட்கள் நடைபெற்று இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.
காலை 10 மணியளவில் ஆரம்பித்த வசந்தமண்டப பூஜையை அடுத்து உள்வீதியுலா வந்த ஐயனார் மதியம் 12 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
சுமார் 370 வருடங்களுக்கு முன்னர் கடலில் மிதந்து வந்த மரப்பொட்டியினுள் ஐயனார் திருவுருவ சிலை காணப்படத்தாகவும், அத்திருவுருவ சிலையை அப்பகுதி மக்கள் அப்பகுதியில் காணப்பட்ட கூலா மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்து , பின்னர் சிறு கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது இராஜ கோபுரத்துடனான கோயில் கட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: ஈழவன்