மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம் நவாஸ் தலைமையில் கடந்த 20ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் குறித்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை எவ்வாறு கையாள்வது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்கும் வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் விசாரணை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்