தப்பியோடிய கொரோனா தொற்றாளர் கைது!

தப்பியோடிய கொரோனா தொற்றாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதை தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க வலங்கொடவில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு தப்பி ஓடியவர் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த இளைஞன் கட்டுநாயக்க 18வது கட்டை பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக தனிமைப்படுத்தல் நிறைவடைந்ததும் வழக்கு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது


Recommended For You

About the Author: ஈழவன்