மடு திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

மன்னார், மடு மாதாவின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவையை ரயில்வே திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில், நீர்கொழும்பில் இருந்து மடு வீதி ரயில் நிலையம் வரை இன்றும் நாளையும் இந்த ரயில் சேவை இடம்பெறுகிறது.

இதன்படி நீர்கொழும்பிலிருந்து இன்று காலை 7.30இற்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த ரயில் குரண, கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, ராகமை, கம்பஹா, வெயாங்கொட மற்றும் குருணாகல் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுவதோடு, ரயில் பிற்பகல் 3 மணி அளவில் மடு வீதி ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

அதேபோல் நாளை மாலை 4.30இற்கு மடு வீதி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 12.30இற்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது.


Recommended For You

About the Author: Editor