பிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்!

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல  மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி தனது 98 ஆவது வயதில் காலமானார்.

கடந்த 1996-ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகில் பயணத்தைத் தொடங்கிய அவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

அண்மையில் கொரோானா தொற்றில் இருந்து விடுபட்ட அவர் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்