வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், இறுதி உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் மெலனியா ட்ரம்ப் நன்றியும் தெரிவித்தார்.

அத்தோடு அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு போதிக்குமாறும் மெலனியா ட்ரம்ப் கேட்டுக் கொண்டார்.

ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க நாடாளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், ட்ரம்ப் ஆதரவாளர் நாடாளுமன்றம் அமைந்துள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர்.

ஜனவரி 6 ஆம் திகதி இடம்பெற்ற இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor