சசிகலா வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை!

சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி உள்ளார்.

சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை.

சசிகலாவுடன் இருந்த பெரும்பாலோனார் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். சிலர்தான் அவருடன் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor