வெஸ்ட் இண்டீஸ் செம டேஞ்சர்.. பாக். தேறாது..

நாட்டிங்ஹம் : 2019 உலகக்கோப்பை தொடரில் மோசமான துவக்கம் பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தன் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி படு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அதிர்ச்சி அளித்தது

நடப்பது டி20 போட்டியா? என சந்தேகம் வரும் அளவுக்கு 2 ஓவர்களுக்குள் 9 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது பாகிஸ்தான் அணி.

“டேஞ்சர்” அணி

“டேஞ்சர்” அணி

இந்தப் போட்டிக்கு முன் பேட்டி அளித்த வாசிம் அக்ரம், பாகிஸ்தான் பேட்டிங் சரியும் என்பதை சூசகமாக சுட்டிக் காட்டி இருந்தார். அதாவது, நேரடியாக சொல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணி ‘டேஞ்சர்’ அணி என கூறி இருந்தார். வாசிம் அக்ரம் சரியாக எச்சரித்தும், பாகிஸ்தான் அணி உஷாராகவில்லை. என்னதான் நடந்தது?

ரசிகர்கள் கணிப்பு

ரசிகர்கள் கணிப்பு

வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு முன் பலரும் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் பலமான அணி, பாகிஸ்தான் பந்துவீச்சில் பலமான அணி என கூறி வந்தனர்.

அக்ரம் சொன்னது என்ன?

அக்ரம் சொன்னது என்ன?

ஆனால், இதற்கு மாறாக வாசிம் அக்ரம், ‘வெஸ்ட் இண்டீஸ் டேஞ்சரான அணி. பாகிஸ்தான் அவர்களிடம் தைரியமாகவும், மன உறுதியுடனும், முன்னே வந்து ஆட வேண்டும்’ என்று வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு பலமானது என கூறினார்.

உதாரணம் காட்டினார்

உதாரணம் காட்டினார்

இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தாலும், அடுத்து வந்த அனுபவ வீரர் ஜோ ரூட் தைரியமாக சரியான ஷாட்கள் அடித்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு அழுத்தம் கொடுத்தார். அதை சுட்டிக் காட்டி, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதே போல ஆடவேண்டும் என்றார்.

கைவிட்ட ஜமான்

கைவிட்ட ஜமான்

பாகிஸ்தான் அணியில் பாக்கர் ஜமான் மட்டுமே அப்படி அதிரடியாக ஆடக் கூடிய பேட்ஸ்மேன் என்று கூறினார் வாசிம் அக்ரம். ஆனால், ரஸ்ஸல் வீசிய பவுன்சரை சமாளிக்க முடியாமல் திணற, பந்து அவர் ஹெல்மட்டில் மோதி, ஸ்டம்ப்புகளை பதம் பார்த்தது.

ஆசிப் அலி இல்லை

ஆசிப் அலி இல்லை

அதே போல, ஆசிப் அலி பாகிஸ்தான் அணியில் நிச்சயம் இடம் பெற வேண்டும் என்று கூறினார் அக்ரம். ஆனால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆக மொத்தத்தில் வாசிம் அக்ரம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு குறித்து முன்பே எச்சரித்தும், பாகிஸ்தான் அணி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

ஆலோசனை

ஆலோசனை

இனியாவது, முன்னாள் வீரர்கள் என்ன ஆலோசனை சொல்கிறார்கள் என கேட்பது பாகிஸ்தான் அணிக்கு நல்லது. ஏற்கனவே, உலகக்கோப்பை தொடருக்கு முன் 10 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையில் என்ன செய்யப் போகிறது?


Recommended For You

About the Author: Editor