யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் லண்டனில் கொரோனாவுக்கு பலி!

பிருத்தானியா லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரியின் பழைய மாணவனும் 2004 -2005 ம் ஆண்டின் கல்லுாரியின் கிறிகட் அணியின் தலைவனாகவும் விளங்கிய 32 வயதான மயூரப்பிரியன் கொரோனாவுக்கு இரையாகிப் பலியாகியுள்ளான்.

இவனது இழப்பினால் யாழ்இந்துச் சமூகம் மற்றும் கிறிகட் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் கொரோனாவுக்கு இலக்காகி பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மிகுந்த கவலைதரும் விடயமாக உள்ளதாகவும் அவதானமாக செயற்படுமாறும் புலம்பெயர் தமிழர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor