சூடானில் இரு பழங்குடி இன குழுக்களிடையே மோதல்: 83பேர் உயிரிழப்பு!

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் எல் ஜெனீனா நகரில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 83யை எட்டியுள்ளதாக மருத்துவர்கள் மத்திய குழு (சி.சி.எஸ்.டி) தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நடந்த இந்த மோதலில் 160பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறிக்கையில், காயமடைந்தவர்களை வெளியேற்றுவதில் மருத்துவ குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், அவர்களில் சிலர் இராணுவ வீரர்கள் என்றும் குழு தெரிவித்துள்ளது.

மேற்கு டார்பூர் மாநிலத்தின் தலைநகரான ஜெனீனாவில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள், நிலைமை இன்னும் பதற்றமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நகரின் புறநகரில் அமைந்துள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கெரெண்டிங் முகாமைச் சுற்றி தொடர்ந்து மோதல்கள் நடந்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதனால், மேற்கு டார்பூர் மாநில அதிகாரிகள் மாநிலத்தில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர்.

மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் அராப் பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த மோதலின் போது, இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.


Recommended For You

About the Author: ஈழவன்