சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 137 குடும்பங்களை சேர்ந்த, 16 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் 5 ஆயிரத்து 164 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 ஆயிரத்து 482 பேர் மண்முணை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாணத்தில் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 800 பேரும், யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 745 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்