மாஸ்டர் திரையிட்ட திரையரங்குக்கு சீல்!

கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழில் உள்ள திரையரங்கம் ஒன்று சுகாதார பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
விஜயின் மாஸ்டர் திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ளது. அந்நிலையில் இலங்கையில் இன்று அதிகாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட்டன.
அதிகாலை முதல் காட்சியை பார்க்க என நேற்று நள்ளிரவு முதல் ரசிகர்கள் யாழ் நகர் பகுதிகளில் குவிந்து , நகரில் உள்ள திரையரங்குகளின் முன்பாக காத்திருந்தனர்.
அதிகாலை காட்சி திரையிடப்பட்ட போது ரசிகர்கள் பலரும் முண்டியடித்து ரிக்கெட் கொள்வனவுகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றினை 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்