யாழில் மழை காரணமாக 1047 பேர் பாதிப்பு!

யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு நேற்று காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழை தாக்கத்தின் காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரீ.என்.சூரியராஜா, தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: ஈழவன்