வடக்கில் நேற்று மாத்திரம் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு

வடக்கு மாகாணத்தில் நேற்று மாத்திரம் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 313 பேருக்கும் நேற்று (திங்கட்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனையில், வடக்கில் 31 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் உள்ள பளை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் முல்லைத்தீவில் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஏனைய 27 பேரும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என வைத்தியர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். மருத்துவபீட ஆய்வுகூட பரிசோதனையில், வவுனியாவைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியாவில் மாத்திரம் நேற்று 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்