காஷ்மீர் பனிப்பொழிவு : பேரிடராக அறிவித்தது அரசாங்கம்!

காஷ்மீரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு வாகனங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும், மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளதால், பனிப்பொழிவால் பாதிக்கப்படும் மக்களுக்கு, ஜம்முகாஷ்மீர் அரசின் நிவாரணம் மற்றும் நிதியுதவி போன்றவை இனி சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்