மாஸ்டர் திரைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட தடை!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ”எங்களது நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாஸ்டர் திரைப்படத்தை 400 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்