யாழ் பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்

முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்ல மாணவிகளின் படுகொலை நினைவேந்தல் இன்று (14) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதேநாள் 2006ம் ஆண்டு செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட விமானத்துக்களில் 61 மாணவிகள் உடல் சிறதிப் பலியாகியிருந்தனர்.

இந்தக் கொடூரத்தின் 13ம் ஆண்டு நினைவேந்தல் இன்றாகும்.

இதன்படி இன்று காலை யாழ் பல்கலைக்கழத்தில் மாணவிகளின் படத்திற்கு மெலுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்பாவி மாணவிகளைக் கொன்று குவித்த அரசாங்கம் இன்று வரையில் தாம் புலிகளின் தளம் மீதே தாக்குதல் நடத்தினோம். பலவந்தமாக இணைக்கப்பட்ட சிறுவர் போராளிகளே கொல்லப்பட்டனர் என்று பொய்ப் பரப்புரை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya