பறவைக் காய்ச்சலை தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல திட்டம்!

கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சலைத் தடுக்க 36 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

இது குறித்து கேரள அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாத்துகளால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே தகவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பறவைக் காய்ச்சலால் இறப்புகள் நிகழும் பகுதிகளில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து மர்மமான முறையில் பறவைகள் இறக்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதித்துள்ள மாநில அரசுகள்  சுற்றுப் பகுதிகளில் உள்ள பறவைகளை அழிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளன


Recommended For You

About the Author: ஈழவன்