116 மரணங்கள் 12,489 தொற்று தொடரும் ஆபத்து!

மீண்டும் கொரோனா சாவுககளும் அதியுச்சத் தொற்றும்  அதிகரித்துள்ளன. அரசாங்கம் அச்சம் தெரிவித்தபடி, கொண்டாட்டங்களின் பின்னரான் தொற்றுக்கள் மிகவும் மோசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

நாளை பாடசாலைகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்தத் தொற்று  அதிகரிப்பு மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 12.489   பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள்116 பேர் கொரோனாத் தொற்றால் சாவடைந்துள்ளனர். இதானல் பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்தவர்களின்  தொகை 65.037 ஆக உயர்ந்துள்ளது.
நாளிற்கு நாள் அதிகரித்து. 24.780  பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2.665 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். நாளிற்கு நாள்  இது அதிகரித்தே செல்கின்றது

Recommended For You

About the Author: Editor